நெகிழ்ந்த தருணங்கள்!!!

நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!

Sunday, April 25, 2010

நெகிழ வைக்கும் மாணவ-பெருந்தகை!!

பள்ளி - என்றும் மனிதத்தை உருவாக்கும் இறை கூடம் என்று மீண்டும்  ஒரு முறை அழுத்தமாக உறுதி செய்த - மாணவ-பெருந்தகை (திரு சீத்தாராமன் அவர்கள்)  நித்ய பொழுதும் நெகிழ வைக்கிறார்!!

சுட்டி = http://dbtrnhss.blogspot.com/2010/03/12.html  (நன்றி: சீமாச்சு)

திரு சீத்தாராமன் அவர்கள் - வாழிய பல்லாண்டு!!

நெகிழ வைத்த பாடல்கள்!!!

எத்தனை  முறை கேட்டாலும் அத்தனை முறையும் நெகிழ வைக்கும் பாடல்கள்.....

ஒவ்வொரு ஒவ்வொரு பூக்களுமே .... ஆட்டோகிராப் 

அதிலும் அந்த மாற்று திறனுடைய மனிதர் - உணர்ச்சியுடன் பாடும் 
"மனிதா உன் மனதை கீறி விதை போடு - மரமாகும்!
 அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்!!"
  - என்றும் எவரையும் நெகிழ வைக்கும் 

பிள்ளை நிலா.... நீங்கள் கேட்டவை 



எப்போதும் என் தாய் பாடுவதுபோல் ஓர் நெகிழ் உணர்வு ஏற்படும்...

உங்களை நெகிழ வைத்த பாடலை அல்லது பாடல் வரிகளை - பின்னூட்டம் - செய்தால் மிகவும் நெ(ம)கிழ்வாக இருக்கும்!!

Wednesday, April 7, 2010

யார் கடவுள்!!

இன்று "அன்பே சிவம்" படத்தில் பார்த்த  சிறு காட்சி ஒன்று - மனதை நெகிழ செய்தது! 
அந்த வார்த்தைகள் - நாள் முழுவதும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது!

வார்த்தைகள் = "முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடற அந்த மனசு இருக்கே - அதான் கடவுள்!!"

Tuesday, April 6, 2010

நெகிழ வைத்த மனித நேயம்!

ஒருமுறை நான், பெங்களூருலிருந்து யஷ்வந்த்பூர் - ஹவ்ரா ரயிலில் கொல்கத்தாவுக்கு பயணித்து கொண்டிருந்தேன். எதிரில் உட்கார்ந்திருந்த இரண்டு ஒரிஸா காவல்காரர்களிடம் முதியவர் ஒருவர் ஏதோ கேட்டார். அவர்கள் இல்லை என்பது போல் கை ஆட்டினார்கள்.
அந்த முதியவரின் கண்கள் கலங்கி இருந்தன. திரும்பத் திரும்ப அந்த முதியவர், அவர்களிடம் வந்து ஏதோ கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் பேசிய கடைசி வார்த்தை எப்ப வரும்? என்றது மட்டும் எனக்கு கேட்டது. ''உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். இதைக் கேட்ட அந்த முதியவர், நீங்கள் தமிழா? என்று கேட்டு, கண்களில் கண்ணீர் வழிய தான் சென்னை - ஹவ்ரா மெயிலில் ஒரு ட்ராவ்ஸ் குழுவுடன் வரும்போது ராஜமுந்திரி ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க இறங்கியதால், ரயிலைத் தவற விட்டதாகவும், புவனேஸ்வர் போக வேண்டும் என்றும் சொன்னார். அவரிடம் ட்ராவல் குழு ஃபோன் நண்பர் இல்லை. ஆனால் மங்கையர் மலர் இதழில் அந்த ட்ராவல்ஸ் விளம்பரத்தைப் பார்த்துதான் வந்ததாகக் கூறினார்.
உடனே என்னிடம் இருந்த 'மங்கையர் மலர்' (ஜூலை) இதழை எடுத்துப் பார்த்தேன். அவர் குறிப்பிட்ட அந்த ட்ராவல்ஸ் விளம்பர்தில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, அன்று பயணித்துக் கொண்டிருந்த டூர் கைடைத் தொடர்பு கொண்டேன். பதற்றத்தோடு இருந்து அவரது குழுவிடமும் நிலைமையை விளக்கினேன்.
எங்கள் இரயில் இரவு 11.30க்கு புவனேஸ்வரில் வரும்போது இந்தப் பெரியவரை அழைத்து செல்லும்படி கூறினேன். அவர் மூன்று மணி நேரம் புவனேஸ்வர் ஸ்டேஷனில் காத்திருந்து அந்த முதியவரைர அழைத்துச் சென்றார். அப்போது அஹமத் என்னும் ஒரு முஸ்லிம் தன் செல்ஃபோனைக் கொடுத்து எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஃபோன் செய்யுங்கள் என்று சொன்னார், இதுதான் மனித நேயம்
புவனேஸ்வரில் சீதாராமன் என்னும் இந்த முதியவரை ட்ராவல்ஸ் குழுவின் கைடு பரிவோடு கையைப்பிடித்து அழைத்துச் சென்றபோது என் தந்தை என்னைவிட்டுப் பிரிந்து போவதுபோல் என் கண்களில் நீர் துளிர்த்தது.


-----( - சாந்தா ஜானகிராமன், கொல்கத்தா


 மங்கையர் மலர்

Sunday, April 4, 2010

நெகிழ்த்திய உருவக கதை

ஒரு சிறுமி , தன்னுடைய தோழியின் -" புற்றுநோய் - முடி உதிர்தல்" பொருட்டு தனக்கும் "மொட்டை" அடிக்க சொல்லி , தந்தையிடம் மன்றாடுகின்ற கதை - வரலொட்டி ரெங்கசாமி எழுத்தியது !!

கதை படித்து முடித்தவுடன் - மனம் நெகிழ்ந்து , கண்ணீர் அரும்பியது!!




மன நெகிழ்வுகள் !!!

நாம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் - நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!